மனித உரிமைகள் மீதான அமெரிக்க ஆணையம்(IACHR) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் பிரேசில் நாட்டில் இந்தாண்டின் ஒவ்வொரு நாளும் சராசரியாக 4 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

பிரேசிலில் பெண் கொலைகளை தடுக்கவும், விசாரணை நடத்தவும் இன்னும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளதாகவும் 35 உறுப்பினர்களை கொண்ட மனித உரிமைகள் மீதான அமெரிக்க ஆணையம்(IACHR) கூறியுள்ளது. மேலும், பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, வழக்குகளை நடத்துவது, விசாரிப்பது மற்றும் தண்டனை வழங்குவது என இவை அனைத்திற்கும் பிரேசில் ஒரு விரிவான திட்டங்களை வகுக்க வேண்டும்.

பிரேசில் மட்டுமின்றி 15 முக்கிய லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் பெண் கொலைகளை தடுக்க கடந்த சில ஆண்டுகளில் தனி சட்டங்களை கொண்டுவந்துள்ளன.