திருவனந்தபுரம்:
கேரள மாநிலம், திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நடிகர் சுரேஷ் கோபி, கேரள மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டாலும், நிர்மலா சீத்தாராமனுக்கு அதிக வாய்ப்பு என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், நிர்மலா சீத்தாராமன் தமிழகத்தின் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர் என்றாலும், அவரின் தாயார் கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த மான் கொம்பு என்றும், தேர்வுக்கான காரணம் கூறப்பட்டுள்ளது.