கேபிள் டிவியில் அனைத்து சேனல்களுக்கும் அரசே கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் நல்லூர் நுகர்வோர் நல மன்றம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. திருப்பூர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி தலைமையில் திங்களன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். இதில் விஜயாபுரம் அடுத்த குறும்பபாளையம் பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நல்லூர் கிராம பகுதியில் அரசு நத்தம் புறம்போக்கில் மாநில
அரசால் வழங்கப்பட்ட இடத்தில் 50க்கும் மேற்பட்டோர் வீடு கட்டி குடியிருந்து வருகிறோம்.இப்பகுதியின் தென்புறத்தில் ஓடைஒன்று உள்ளது. இதன்மூலம், மழைக்காலங்களில் மழை நீர் சென்று வருகிறது. இத்தகைய நீர் வழித்தடத்தை தனியார் ஒருவர் மண் கொட்டி மூடியுள்ளார். இதனால் மழை காலங்களில் நீர்வழிப்பாதையில் வரக்கூடிய மழை நீர் வீடுகளில் புகுந்து கொள்ள அதிக வாய்ப்புள்ளது. இதுகுறித்து அவரிடம் கேட்டால் எங்களை தகாத வார்த்தைகளில் பேசி வருகிறார். எனவே, இதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். இதேபோல், குறும்பபாளையம் பகுதியில் கடந்த 30 வருடங்களாக 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றோம். இப்பகுதியில் தனியார் ஒருவர் அரசு நிலத்தை தன்னுடையது என உரிமை கொண்டாடி வருகிறார். மேலும், அப்பகுதியை யாரும் பயன்படுத்தக் கூடாது எனவும் அச்சுறுத்தி வருகின்றார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுத்து பாதையை மீட்டு தர வேண்டும் என மனுவில் கோரியிருந்தனர்.

கேபிள் டிவி கட்டணம்
நல்லூர் நுகர்வோர் நல மன்றம் சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம், கேபிள் இணைப்பை பொதுமக்கள் பெற வேண்டும் என்று அரசு மூலமாக இலவச செட்டாப் பாக்ஸ் வழங்கப்பட்டது. மேலும்,அதன்மூலம் ஒளிபரப்பாகும் அனைத்து சேனல்கள