வவாஷிங்டன்: உலக வங்கி தலைவர் பதவியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு டொனால்டு டிரம்ப் தீவிரமாக முயற்சித்து வருவது தெரிகிறது. அந்த பதவிக்கு அவரது மகள் இவாங்காவை இப்போதிருந்தே முன்னிறுத்தி வருகிறார்கள். தற்போதைய உலக வங்கி தலைவர் ஜிம் யோங் கிம்மின் பதவிக்காலம் பிப்ரவரி 1 அன்று முடிகிறது. இப்பதவிக்கு அமெரிக்காவின் அதிகாரிகளான நிக்கி ஹேலி, மார்க் கிரின் ஆகியோரின் பெயரும் அடிபடுகிறது.