திருவனந்தபுரம்,
சபரிமலையில் பெண்கள் வழிபாட்டைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜவினர் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதைக்கண்டித்து பத்திரிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 2 பெண்கள் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் சென்று வழிபாட்டில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து பாஜக உள்ளிட்ட சங்கபரிவார் அமைப்பினர் கேரளாவின் பல பகுதிகளில் திட்டமிட்டு வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டதைத்தொடர்ந்து அங்கு செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். சங்கபரிவார் அமைப்பினரின் இந்த அராஜக செயலைக்கண்டித்து கேரள உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் இன்று திருவனந்தபுரத்தில் கண்டன பேரணி நடத்தினர். இதில் அனைத்து பத்திரிகைகளையும் சேர்ந்த ஏராளமான பத்திரிகையாளர்கள் பங்கேற்றனர். பேரணியின் போது சங்கபரிவார் அமைப்புகளுக்கு எதிரான கோஷமிட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.