திருவனந்தபுரம்:
சபரிமலை குறித்து வடிகட்டிய பொய்களை படைத்து வகுப்புவாத பிரிவினையை பரப்பிவரும் விலகி பந்தளத்தைச் சேர்ந்த 14 குடும்பங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.

பந்தளம் கடய்க்காடு அருகில் உள்ள மாடப்பள்ளி வீட்டில் சிவராமன், அருகில் வசிக்கும் சரத், லீலா, செல்லம்மா, சஜு, ஷியாம், நீத்து, அஸ்வினி பவனில் மது, நெடுவக்காடு கிழக்கில் ராஜேந்திரன்பிள்ளை, ராஜேந்திரன், தூண்டில் வடக்கில் அச்சுதன், வத்சலா உள்ளிட்டோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளர்.

வகுப்புவாத அடிப்படையிலும், நம்பிக்கைகளின் மறைவில் நடக்கும் துர்பிரச்சாரங்களிலும் வெறுப்புற்று ஆர்எஸ்எஸ்சிலிருந்து விலகுவதாக இவர்கள் தெரிவித்துள்ளனர். பல ஆண்டுகளாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்சில் வட்டார அளவில் இவர்கள் தலைமை வகித்து செயல்பட்டவர்களாவர்.

இவர்களை வரவேற்று நடந்த பொதுக்கூட்டத்தை துவக்கி வைத்து கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.பி.உதயபானு பேசினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.