சோச்சி:                                                                                                                                                                               2018-ஆம் ஆண்டிற் கான பார்முலா 1 கார்பந்தயம் 21 சுற்றுகளாக பிரிக்கப்பட்டு பல்வேறு
நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது.

பார்முலா 1 பந்தயத்தின் 16-வது சுற்றுத் தொடர் ரஷ்யாவின் சோச்சி நகரில் ஞாயிறன்று நடைபெற்றது. பந்தய தூரமான 309.745 கிலோ மீட்டர் தூரத்தை இங்கிலாந்தின் ஹாமில்டன் (மெர்சிடஸ்) 1 மணி 27 நிமிடம் 25.181 வினாடிகளில் கடந்து 25 புள்ளிகளுடன் முதலிடம்பிடித் தார். பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் (மெர்சிடஸ்) 2.545 வினாடி பின்தங்கி 2-வது இடத்தையும், ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் (பெராரி அணி) 7.487 வினாடி பின்தங்கி 3-வது இடத்தையும் பிடித்து அசத்தினர். ஆரம்பத்தில் போட்டாஸ், ஹாமில்டனை விட 8 வினாடி கணக்கில் முன்னிலையில் சென்று கொண்டிருந்தார்.இருவரும் ஒரே அணி (மெர் சிடஸ்) என்பதாலும், ஹாமில்டன் சாம்பியன்ஷிப் பட்டத்தை நெருங்கியுள்ளதாலும் அவருக்கு வழிவிடும்படி மெர்சிடஸ் அணி நிர்வாகம் கேட்டுக்கொண்டதால் ஹாமில்டனுக்கு வழிவிட்டு ஒதுங்கினார். இல்லாவிட்டால் போட்டாஸ் முதலிடத்தை பிடித்திருப்பார்.

16 சுற்று முடிவில் ஹாமில்டன் (மெர்சிடஸ்) 306 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். செபா
ஸ்டியன் வெட்டல் (பெராரி) 256 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், போட்டாஸ் (மெர்சிடஸ்) 189 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.இந்த போட்டியை நேரில் கண்டுகளித்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.பார்முலா 1 கார்பந்தயத்தின் 17-வது சுற்று வருகிற 7-ஆம் தேதி ஜப்பானில் நடைபெறுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.