திருப்பூர்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், சுதந்திரப் போராட்ட வீரருமான தோழர் ஹரிகிஷன் சிங் சுர்ஜித்தின் நினைவு தினம் ஆகஸ்ட் 1ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு அவரது நினைவுதினப் பொதுக்கூட்டம் குன்னத்தூரில் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகா குன்னத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே திங்களன்று மாலை பொதுக்கூட்டம் நடைபெற்றது. குன்னத்தூர் நகர கிளைச் செயலாளர் பி.சின்னசாமி தலைமையில் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்தில், கட்சியின் தமிழ் மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் கலந்து கொண்டு சுர்ஜித்தின் பங்களிப்பை விளக்கி இன்றைய அரசியல் நிலவரம் குறித்து சிறப்புரை ஆற்றினார். இந்த பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், ஊத்துக்குளி தாலுகா செயலாளர் சிவசாமி, தாலுகா குழு உறுப்பினர் கந்தசாமி, குன்னத்தூர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் உரையாற்றினர். இக்கூட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.