சென்னை:
ஐ.பி.எல். 11-வது சீசனில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7 ஆட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.காவிரி போராட்டம் காரணமாக மிகவும் சிரமப்பட்டு சென்னை-கொல்கத்தா அணிகள் மோதிய ஆட்டம் மட்டும் நடத்தப்பட்டது.எஞ்சிய 6 ஆட்டங்களும் புனேக்கு மாற்றப்பட்டன.சென்னை சூப்பர் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் ஆட்டம் புனேயில் நாளை (20-ஆம் தேதி) நடைபெறுகிறது.இந்த ஆட்டத்தை காண சிறப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் தங்களது அணி நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்தனர். 

ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட அணி நிர்வாகம் ரயில்வே துறையிடம் ஆலோசனை செய்து புனேக்கு செல்ல சிறப்பு ரெயிலை ஏற்பாடு செய்தது.இந்த சிறப்பு ரயிலில் ரசிகர்களுக்காக மொத்தம் 13 சாதரண கோச்களும்,ஒரு ஏ/சி கோச்சும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.‘‘விசில் போடு’’ எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்ட இந்த சிறப்பு ரெயிலில் பயணிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு நன்கொடை டிக்கெட், தங்குமிடம்,உணவு என அனைத்து ஏற்பாடுகளையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

‘‘விசில் போடு’’ எக்ஸ்பிரஸ் இன்று காலை சென்ட்ரலில் இருந்து புனேக்கு புறப்பட்டது.நாளை காலை 8.30 மணிக்கு புனே சென்றடையும்.போட்டி முடிந்தவுடன் ஞாயிற்றுக்கிழமை காலை புனேயில் சென்னை திரும்பும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்ஸி மற்றும் கொடியுடன் 1000 ரசிகர்களை சென்னை அணியின் நிர்வாக இயக்குனர் ராகேஷ் சிங் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.
ரசிகர்களின் சிறிய வேண்டுகோளுக்காக ஒரு ரயிலையே வாடகைக்கு பிடித்து 1000 ரசிகர்களை புனேக்கு அனுப்பிய சென்னை அணி நிர்வாகத்தின் செயல் பாராட்டுக்குரியதே.

 

Leave a Reply

You must be logged in to post a comment.