சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வடசென்னை மாவட்டம் வலியுறுத்தியுள்ளது.

109வது உலக பெண்கள் தினத்தை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வடசென்னை மாவட்டக்குழு சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்டத்தலைவர் ம.அந்தோணிசாமி தலைமை தாங்கினார். செயலாளர் ஜெ.பட்டாபி வரவேற்புரையாற்றினார்.

ஜேக்டோ-ஜியோ போராட்டமும் பெண்களின் பங்கேற்பும் என்ற தலைப்பில் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில மகளிர் அமைப்புச் செயலாளர் என்.அருணா, அரசு ஊழியர் இயக்கமும் மகளிர் துணைக்குழு பங்களிப்பும் என்ற தலைப்பில் ப.சுந்தரம்மாள், மாவட்ட அமைப்பும் மகளிர் பங்கேற்பும் தலைப்பில் ஜெ.சரஸ்வதி ஆகியோர் பேசினர்.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் குழந்தைக்காப்பகங்கள் அமைக்கவேண்டும், சத்துணவு மற்றும் ஊட்டச்சத்து பணியாளர்களை அரசு ஊழியர்களாக்கவேண்டும், வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள பெண்களுக்கு பணிவழங்க வேண்டும், காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. நிறைவாக மகளிர் துணைக்குழு உறுப்பினர் ஏ.விஜயா நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.