மாங்காடு ஓம்சக்தி நகர், ஜனனி நகர், சீனிவாச நகர், பத்மாவதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழை வெள்ளம் இன்னும் வடியாமல் உள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த திங் கட்கிழமை முதல் தொடர்ந்து மழை பெய்தது. கடந்த 2 நாட்களாகத்தான் மழையின் தாக்கம் குறைந்துள்ளது. இருப்பினும் இன்னும் சில இடங்களில் மழை வெள்ளம் வடியாமல் தேங்கி உள்ளது.மாங்காடு பகுதியில் இது போன்று தேங்கி இருக்கும் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் 1000 குடும்பத்தினர் பாதிக்கப் பட்டுள்ளனர். நசரத்பேட்டை பகுதியில் இருந்து பெருக் கெடுத்து வரும் வெள்ளமே இந்த பகுதியில் தேங்கி நிற்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

இந்த தண்ணீர் அங்குள்ள மெயின் ரோட்டிலும் வடியாமல் உள்ளது. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 3 கி.மீ. சுற்றளவுக்கு மழையின் பாதிப்பு தொடர்கிறது.இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த வியாபாரி அப்துல் ரகுமான் கூறுகையில் மாங்காடு ஓம்சக்தி நகரில் தேங்கும் தண்ணீர் வெளி இடங்களில் இருந்து வருவதாகும். போரூர் ஏரியை சென்றடைய வேண்டிய தண்ணீரே இங்கு தேங்குகிறது. இதனால் மழைநீர் வெளியேறுவதற்கு வடிகால் அமைத்து கொடுக்க வேண்டும். அப்போதுதான் தண்ணீர் தேங்குவது தவிர்க் கப்படும் என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.