நியூயார்க்;
இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவரான முகேஷ் அம்பானி ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரர் என்று போர்ப்ஸ் பத்திரிக்கை கூறியுள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் சீனாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான எவர்கிராண்ட் குழுமத்தின் தலைவரான ஹூ கா யான் 40.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத் தலைவருமான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 42.1 பில்லியன் டாலர்களாக உயர்ந்ததையடுத்து ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக முகேஷ் அம்பானி உருவெடுத்துள்ளார் என்று போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மாபெரும் நிறுவனங்களுள் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்கு மதிப்பு ரூ. 6 லட்சம் கோடியைத் தாண்டியதாலேயே முகேஷ் அம்பானி இந்த உயர்வைப் பெற்றிருக்கிறார். மேலும், ரூ.6 லட்சம் கோடி பங்கு மதிப்பைத் தாண்டிய முதல் இந்திய நிறுவனம் என்ற சிறப்பையும் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பெற்றுள்ளது.முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அவரது தந்தை திருபாய் அம்பானியால் தொடங்கப்பட்டது. எனினும் இந்திய ஆட்சியாளர்களின் உதவியுடன் அதனை முகேஷ் அம்பானி பல்வேறு பிரிவுகளில் விரிவடையச் செய்து லாபத்தை குவித்து வருகிறார்.
கடந்த ஆண்டில் நெட்வொர்க் சந்தையில் நுழைந்த முகேஷ் அம்பானி, தனது ஜியோ சேவை வாயிலாக சக போட்டியாளர்களையும், அவர்களின் தொழிலையும் துவம்சம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.