அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘வெப்பச் சலனம் மற்றும் மேற்கு திசைக்காற்றில் ஏற்பட்டுள்ள வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக செங்குன்றத்தில் 5 செமீ பதிவாகியுள்ளது.
அடுத்து வரும் 48 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்’’ என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.