திருவனந்தபுரம்;
நடிகை பாவனா கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி இரவு காரில் சென்று கொண்டிருந்த போது ஒரு கும்பலால் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக, பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில், பாவனா கடத்தல் வழக்கில் தன்னை சிக்க வைக்க சதி நடப்பதாக நடிகர் திலீப் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
பாவனா குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாக திலீப், நடிகர் சலீம் குமார் உள்பட 4 பேர் மீது கேரள மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகாரின் பேரில் திலீப் உள்ளிட்டோர் மீது மகளிர் ஆணையம் வழக்குப் பதிவு செய்துள்ளது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பான தகுந்த ஆதாரங்களை திரட்டி வருவதாகவும் மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.