சென்னை, ஜூன் 25 –
2007 ஆம்ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு விதி விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: தமிழ்நாட்டில் 01.07.2007 அன்றோ அல்லது அதற்கு முன்போ கட்டப்பட்டுள்ள விதிகள் மீறிய அனுமதி பெறாத கட்டிடங்களுக்கு, சென்னைப் பெருநகர பகுதிக்கான வளர்ச்சி விதிகள் மற்றும் நகர் ஊரமைப்புத்துறை விதிகளிலிருந்து விலக்கு அளிக்கும் பரிந்துரைகளை வழங்க நீதியரசர் இராஜேஸ்வரன் தலைமையில் ஒருகுழுவை தமிழக அரசு அமைத்தது. அந்தக் குழு அளித்த பரிந்துரைகள் 13.6.2017 அன்று நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் வைக்கப்பட்டது. இது தொடர்பாக மாநிலத்தில் 1.7.2007க்கு முன்பு கட்டப்பட்ட அனுமதியற்ற கட்டிடங்களுக்கு விலக்களிப்பதற்கு உரிய விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள், அமைச்சரவை முன்பு வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.