மொகதிஷூ,

சோமாலியா தலைநகர் மொகதிஷூ-வில் கார் குண்டு வெடித்ததில் 15 பேர் பலியாகினர்.

சோமாலியா தலைநகர் மொகதிஷூ-வில் மாவட்ட தலைமையகம் முன்பாக தீவிரவாதிகள் இன்று வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட காரை வெடிக்க செய்து தாக்குதல் நடத்தினர். இதில் 15 பேர் பலியாகினர். மேலும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 9 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு அல்-சபாப் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

கடந்த வாரம் மொகதிஷூ-வில் உள்ள உணவு விடுதிக்குள் நுழைந்து அல்-சபாப் தீவிரவாதி ஒருவர் நடத்திய தாக்குதலில் 31 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.