காவல்துறை சிபிஎம் ஊழியர்கள் மீது போடப்படும் பொய்வழக்குகளை கண்டு ஒரு போதும் அஞ்சமாட்டோம். தொடர்ந்து சமூக அநீதிகளுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுப்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி உடுமலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசினார்.
உடுமலையில்  ஊரக வேலை திட்டத்தில் நடத்த ஊழலை தட்டிக்கேட்ட வாலிபர் சங்க தோழர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த உடுமலை துணை கண்காணிப்பாளரின் நடவடிக்கையை கண்டித்து சிபிஎம் சார்பில் இன்று உடுமலை மத்திய பேருந்து நிலையத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் குடிமங்கலம் ஒன்றியம் விருகல்பட்டி ஊராட்சியில்  ஊராக வேலை திட்டத்தில் பல லட்சம் ரூபாய் ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழலில் அனைத்து அரசுத்துறை  அதிகாரிகளுக்கும் தொடர்ப்பு உள்ளது என்று வாலிபர் சங்கம் கோரிக்கை வைத்தது. இதன் அடிப்படையில் கடந்த 08.11.2016ம் தேதி சமூக தணிக்கையில்   ஊரக வேலை திட்டத்தில் பெரிய அளவில் ஊழல் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது.
ஆனால் ஊழல் செய்த அரசு அதிகாரிகள் மீது எவ்வித நடவடிக்கையையும் எடுக்காத செயலை மாவட்ட ஆட்சி தலைவருக்கு 11.11.2016ம் தேதி வாலிபர் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அப்போதும் எவ்வித நடவடிக்கை எடுக்காத நிலையில் 23.11.2016 அன்று விருகல்பட்டி ஊராட்சி வி. வல்லக்குண்டாபுரம் கிராமத்தில் வாலிபர் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் காவல்துறையின் அனுமதியோடு நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை சீர்குலைக்கும் நோக்கத்தில் விருகல்பட்டி ஊராட்சி செயலாளர் பாலமுருகன் அப்பகுதியில் உள்ள சில சமூக விரோதிகளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு அனுப்பி வேண்டும் என்றே அனுப்பி தகராறு செய்தார்கள்.
இந்த சம்பவத்தை வழக்காக குடிமங்கலம் காவல்நிலையத்தில் வாலிபர் சங்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் உடுமலை அரசு மருத்துவமனையில் பாலமுருகன் தூண்டுதலின் பெயரில் தலித்மக்கள் சிலரை வாலிபர் சங்க நிர்வாகிகள் தாக்கியதாக அனுமதித்துள்ளார். இதனை முறையாக விசாரிக்காமல் உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் விவேகானந்தன் வாலிபர் சங்க நிர்வாகிகள் ஆறு பேர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.   இவ்வாறான முறையற்ற வழக்கை வாபஸ் பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல முறை நடத்த சம்பவத்தை அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் விளக்கியும் வழக்கை வாபஸ் பெற மறுத்தார்கள்.
இதையடுத்து  காவல்துறையின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து மார்க்சிஸட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது எங்கள்  வாழ்நாள் முழுவதும் உழைக்கும் மக்களுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்தி இயங்கி வருகிறோம். நாங்கள் அவர்களை தாக்குவோம் என்பதை எதிரிகள் கூட நம்பமாட்டார்கள்.  இப்போதும் நாடு டு முழுவதும் அவர்களுக்கு பாதுகாப்பாக இருப்பதில் முதன்மையானவர்கள் நாங்கள் இருக்கிறோம்.. இதற்காக பல உயிர் தியாகங்களையும் செய்திக்கும் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. தலித் மக்களுக்கான போராட்டத்தில் எங்களின் தியாகம் வெண்மணியில் துவங்கி திருப்பூர் ரத்தினசாமி வரை நீண்ட பாரம்பரியம் கொண்டது. வெண்மணியில் குழந்தைகள் உள்ளிட்ட 44 தோழர்களை எரித்து கொல்லப்பட்டார்கள். நமது மாவட்டத்தில்  திருப்பூர் ரத்தினசாமி தலித் மக்களுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ளார் என்ற காரணத்தால் கொல்லப்பட்டார்.
இன்றும் இது போன்று தலித் மக்களுக்கு ஆதரவு நிலை எடுக்கும் போது பல்வேறு சமூக விரோத எங்களை குறி வைத்து தாக்கி வருகின்றனர். அதனை நாங்கள் எதிர்கொள்வோம். இன்னும் காவல்துறை எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் நாங்கள் என்றும் உழைக்கும் மக்கள் பக்கமே நிற்போம்..
உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளருக்கு  யார் மீதாவது வழக்கு போட வேண்டும் என்றால் ஊராக வேலை திட்டத்தில் பல மாதங்கள் சம்பளம் வழங்காமல் ஏழை ஏமாற்றும் பிரதமர் மோடி மற்றும்  ஊராக வேலை திட்டத்தில் எங்கும் இல்லாத புதிய விதிமுறையாக காலை ஏழு மணிக்கு வேலைக்கு வர உத்தரவு போட்ட திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அதை அமல் படுத்திய அரசு அதிகாரிகள் மீது வழக்கு போட வேண்டும்.  அதைவிடுத்து  தலித் மக்களின் நலனுக்காக பாடுபடும் கம்யூனிஸ்ட்கள் மீது வழக்கு போடுவது காவல்துறையின் பழிவாங்கும் உணர்வை காட்டுகிறது. துணைக்கண்காணிப்பாளர் தனது அதிகார வெறிக்கு நாங்கள் ஒரு போது பயப்பட மாட்டோம். தொடர்ந்து மக்களுக்காக போராடுவோம் என்று பேசினார்.
முன்னாக ஆர்ப்பாட்டத்திற்க்கு சிபிஎம் உடுமலை நகர செயலாளர் எஸ்.ஆர். மதுசூதனன் தலைமை தாங்கினார்.  மாவட்ட செயலாளர் கே. காமராஜ், மாநிலக்குழு உறுப்பினர் செ. முத்துகண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி. சுப்பிரமணியம், எம். ராஜகோபால், மாவட்டகுழு உறுப்பினர்கள் எ. பஞ்சலிங்கம், என். சசிகலா மற்றும் ஒன்றிய செயலாளர்கள் கி. கனராஜ், வெ. ரங்கநாதன், மடத்துகுளம் எம்.எம்.வீரப்பன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு காவல்துறையின் பொய் வழக்குக்கு எதிராக கண்டன முழங்கங்களை எழுப்பினார்கள்.

Leave a Reply

You must be logged in to post a comment.