நியூயார்க், டிச. 20 –

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் , தேர்தல் சபை வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்று அதிகாரபூர்வமாக அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் நவம்பர் 8 ஆம் தேதி நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் , குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் மக்கள் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். இதில் வெற்றி பெறுபவர்கள் , தேர்தல் சபை வாக்கெடுப்பிலும் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் திங்களன்று நடந்த தேர்தல் சபை வாக்கெடுப்பில் 538 பிரதிநிதிகளின் வாக்குகளில் 304 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று அதிகாரபூர்வமாக அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதில் ஹிலாரிக்கு 227 வாக்குகள் கிடைத்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.