அமெரிக்க அதிபராக டொனல்டு ட்ரம்ப் தேர்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த பேரணியில் துப்பாக்கிச் சூடு நடந்ததால் அப்பகுதியில் பரப்பரப்பு அதிகமானது.
“டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றதை எதிர்த்து சியாட்டில் நகரில் புதன்கிழமை இரவு நடைபெற்ற பேரணியில் எதிர்பாராத விதமாக துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் ஐந்து பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் இருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டுக்கும் ட்ரம்பின் பேரணிக்கும் தொடர்புள்ளாதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது” என்று  போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியான சில நிமிடங்களில் கலிஃபோர்னியா மாகாண தெருக்களில் நேற்று திடீரென நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ‘ட்ரம்ப் எங்களது அதிபரல்ல’ என அவர்கள் ஆவேசமாக முழக்கமிட்டனர். வெற்றி ஹிலாரி கிளின்டனின் ஆதரவாளர்களுக்கும், கறுப்பின மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதே போல் போர்ட்லேண்ட் உள்ளிட்ட பகுதியில் ஹிலாரியின் ஆதரவாளர்களும் அமெரிக்க தேசியக் கொடியை தீயிட்டு கொளுத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் பிரதான சாலைகளில் டயர்களை கொளுத்தியும், ட்ரம்பின் உருவபொம்மையை எரித்தும் வன்முறையில் இறங்கினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.