சென்னை, அக். 7 –
எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமங்களின் தலைவரான பச்சமுத்து, கடந்த 2004-ஆம் ஆண்டு, தன்னிடம் 70 லட்சம் ரூபாய் கடன்பெற்றதாகவும், அதனை திருப்பிக் கேட்டபோது, தரமறுத்து அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்ததாகவும் மோகன்குமார் என்பவர் சென்னை வேப்பேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பச்சமுத்து மனுத் தாக்கல் செய்திருந்தார். வெள்ளியன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதி நசீர் அகமது, பச்சமுத்து-வுக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்து விட்டார். வழக்கில் மேலும் சில பிரிவுகள் சேர்க்கப்பட்டு உள்ளதால் பச்சமுத்து புதிதாக ஜாமீன் மனு தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply

You must be logged in to post a comment.