திருநெல்வேலி,அக்.6-
மகளின் காதலனை திருமணம் குறித்து பேச வரவழைத்து கொலை செய்துள்ள சம்பவம் திருநெல்வேலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவகுருநாதன். எம்எஸ்சி படித்து வி்ட்டு மருந்து விற்பனை பிரிதிநிதியாக வேலை பார்த்து வந்தார். நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள தேவர் குளம் கிராமத்தை சேர்ந்தவர் லெட்சுமண பெருமாள். இவரது மகள் கஸ்தூரி. இவர் செவிலியராக திண்டுக்கலில் பணிபுரிந்து வருகிறார். அப்போது திண்டுக்கல், நெய்காரப்பட்டியை சேர்ந்த சிவகுருநாதனுடன் கஸ்தூரிக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் கஸ்தூரியின் தந்தை லெட்சுமணனுக்கு தெரியவந்தது. முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த லெட்சுமணன், பின்னர் சம்மதித்துள்ளார்.

இதையடுத்து திருமண விஷயம் பேசுவதற்காக சிவகுருநாதனை கஸ்தூரியின் வீட்டிற்கு அழைத்துள்ளார். இதை நம்பி வந்த சிவகுருநாதனை, லெட்சுமணன் அங்கு மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வெட்டி வீழ்த்தினார். அதன் பின்னர் லெட்சுமண பெருமாள் அரிவாளுடன் சங்கரன் கோவில் காவல்நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து லெட்சுமண பெருமாள் மீது வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.