எகிப்தில் அகதிகள் படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 202 அதிகரித்துள்ளது.
எகிப்து, சூடான், சோமாலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகளைச் ஏற்றிச் சென்ற படகு மத்திய தரைக்கடலில் கவிழ்ந்தது. கடந்த வாரம் நேரிட்ட இந்த விபத்தில் 169 பேர் உயிருடனும், அதனை தொடர்ந்து 53 பேர் சடலமாகவும் மீட்கப்பட்டனர். படகில் 500-க்கும் மேற்பட்டோர் இருந்ததால் மற்றவர்களின் தேடும் பணி நீடித்து வந்தது. இந்நிலையில் கடலில் மூழ்கிய படகை மீட்பு குழுவினர் மீட்டனர். மீட்கப்பட்ட படகில்  33 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

எகிப்து படகு விபத்தில் இதுவரை 202 பேர் உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஐ.யோ.எம். எனப்படும் சர்வதேச இடம் பெயர்தல் அமைப்பு 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.