ஜகோபாபாத், ஜுன்.9-
பாகிஸ்தானில் 10 வயது குழந்தையை திருமணம் செய்ய முயன்ற 50 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் ஜகோபாபாத்தில் கடந்த சனிக்கிழமை 50 வயது முதியவர் ஒருவர் 10 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்ளப்போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் 50 வயது முதியவரை கைது செய்தனர்.
சிறுமியின் தந்தையும் திருமணம் நடத்தி வைக்க இருந்த மத குருவும் தப்பி ஓடிவிட்டனர். இதைத்தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் 50 வயது முதியவர் 10 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்ள அவரது தந்தையிடம் ரூ 4 லட்சம் வரை வழங்கி உள்ளார் என தெரியவந்து உள்ளது. பாகிஸ்தானில் 15 வயதிற்குள் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது 3 சதவீதம் நடைபெறுகிறது. 18 வயதிற்குள் திருமணம் செய்து வைப்பது 21 சதவீதம் நடைபெறுகிறது.
சிறுமிகள்  திருமணம் செய்வது தொடர்பாக கொண்டுவரப்பட்ட சட்ட மசோதாவை பாகிஸ்தானின் வலிமை உள்ள மத அமைப்புகள் தடுத்து விட்டது குறிப்படத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.