சென்னை, மே 26-

நேர்முகத்தேர்வு என்ற பெயரில் எல்&டி இன்ஃபோடெக் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டுவருகிறது என்று அறுவுசார் வல்லுனர்கள் கூட்டமைப்பு மற்றும் எல்&டி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டோர் தெரிவித்தனர்.

இதுகுறித்து அறுவுசார் வல்லுனர்கள் கூட்டமைப்பு தலைவர் அழகுநம்பி, செயலாளர் சீத்தாராமன், பொருளாளர் பரணிதரன் மற்றும் எல்&டி இன்ஃபோடெக் நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட விக்கி, தனலட்சுமி ஆகியோர் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

எல்&டி இன்ஃபோடெக் நிறுவனம் 2014 இல், பொறியியல் கல்லூரிகளில் நடத்தப்படுகிற வளாக நேர்முக தேர்வுகள் மூலம் சுமார் 5800 பேருக்கு விருப்பப்பணியானை (offer of intent) கொடுத்து 2015 இல் பணிக்கு அழைத்துக்கொள்வதாக கூறியது.

70% பேரை இவ்வாறு அழைத்துக்கொண்ட பிறகு சுமார் 1500 பேருக்கு எந்த தகவலும் பணி நியமனம் தொடர்பாக வரவில்லை. தொடர்ந்து காத்திருக்கசொல்லி அறிவுருத்தல்கள் கொடுத்தவண்ணம் இருந்தநிலையில், 18 மாத காத்திருப்பிற்கு பிறகு திடிரென மேலும் ஒரு தேர்வு இருப்பதாகவும், அதில் தேர்ச்சி பெற வேண்டும் எனவும், ஒரு வாரத்தில் அனைவருக்கும் தேர்வுக்கான சுட்டியுடன்கூடிய மின்னஞ்சல் வருமெனவும் கூறப்பட்டது. இத்தேர்வு முடிந்த ஒரு வாரகாலத்திலேயே 90% பேருக்கு தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றும் அதனால் அவர்களது விருப்பப்பணியானைரத்து செய்யப்பட்டது எனவும் மின்னஞ்சல் அனுப்பப்பட்டது.

தவறுகள் :

 • இதுபோலநடக்கும் வளாக நேர்முகத் தேர்வுகள் முடிவில் கொடுக்கப்படும் பணியானை அல்லது விருப்பப் பணியானைகள் கிடைத்த மாணவர்களை, பணி நியமத்திற்கான எவ்வித உத்திரவாதமும் இல்லாத சூழலில், பொறியியல் கல்லூரிகளின் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதற்கான பிரிவு (placement cells), மாணவர்களை அதன் பிறகு வரும் வளாக நேர்முக தேர்வுகளை எதிர்கொள்ள தடை விதிக்கிறது.
 • இதுபோல் செய்வதன் மூலம், நிறைய மாணவர்களுக்கு  வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக வெளிக்காட்டிக் கொண்டு இதற்கென தனி கட்டணம் வசூலிக்கிறது (capitation fee)
 • பன்னாட்டுதகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், தாங்கள் எதிர்பாத்தபடி புதிய திட்டபணிகள் வரும் பட்சத்தில் இதுபோல் விருப்பப்பணியானை கொடுத்தவர்களை வேலைக்கு அழைத்துக் கொள்ளும், இல்லையேல் இது போல் மோசடி தேர்வுகள் நடத்தி விருப்பப்பணியானையை ரத்து செய்விடும்.
 • இந்தியதகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இதுபோல் திடிர் தேர்வுகள் பொதுவாக பணிநியமனம் தந்தவுடன் நடத்தப்படுவது வழக்கம், ஆனால் இப்போது அதற்கு முன்னரே நடதத்தப்படுவது என்பது பரவலாகி வருகிறது.
 • வேலையில்லாதிண்டாட்டம் அதிகரித்து வரும் சூழலில், கல்லூரிகளின் வேலைவாய்ப்பு பிரிவிற்கும், பன்னாட்டு நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டுதுறைக்கும் இருக்கும் கூட்டே இது போன்று மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடும் ஆபத்தான கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது.
 • இந்த 18 மாதங்களில் எல்&டி இன்ஃபோடெக் நிறுவனமும், கல்லூரிகளும் வேலைவாய்ப்பு நிச்சயம் என்ற பிம்பத்தை உருவாக்கி, மோசடி செய்ததன் விளைவாக எவ்வித வேலை அனுபவமும் கிடைக்காமல் ஒன்றரை வருட வாழ்க்கை இவர்களுக்கு வீணாய் போயிருக்கிறது. இதன் காரணமமாக வேறு ஒரு நல்ல வேலை தேடும் படலுமும் பாதிக்கப்படுகிறது.
 • இந்த மோசடியில் பெரும்பாலும் பாதிக்கப்பட்டது பெண்களாகும், மேலும் இது போல் மோசடி தேர்வுகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்து வருகிறது.

உடனடி கோரிக்கைகள் :

 • 1500 பேரையும் உடனே வேலைக்கெடுத்துக்கொள்வது.
 • பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசும், அண்ணா பல்கலைக்கழகமும், மத்திய, மாநில தொழிலாளர் துறையும் உடனே தலையிட்டு வேலைவாய்ப்புக்களை பெற்றுத்தருவது.
 • 1.5 வருடத்திற்காண ஊதிய இழப்பீட்டை அரசும், அண்ணா பல்கலைக்கழகமும், மத்திய, மாநில தொழிலாளர் துறையும் உடனே தலையிட்டு பெற்றுத்தருவது.
 • அரசும், அண்ணா பல்கலைக்கழகமும், மாநில தொழிலாளர் துறையும் தலையிட்டு, வளாக நேர்முகத்தேர்வில் பரவி வரும் இதுபோன்ற விஷ கலாச்சாரத்தை தடுப்பது.
 • அரசு, இதுபோன்ற பன்னாட்டு நிறுவனங்களின் நேர்மையற்ற மோசடி செயல்பாடுகளையும், பணியாள்களுக்கு கொடுக்கப்படும் நலச்சலுகைகளையும் கண்காணிப்பதற்காக தொழிலாளர் குழுக்களை அமைப்பது.

வளர்ச்சிப் போக்குகள் :

 • ஏறக்குறைய 2000 கையெழுத்துகளிட்ட change.org மனு இணையதளத்தில் பரவலாக பகிரப்பட்டுள்ளது.
 • எல்&டி இன்ஃபோடெக் நிறுவன இயக்குனருக்கும், மத்திய மாநில தொழிலாளர் துறைக்கும் பதிவு தபாலில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய தொழிலாளர் துறை ஆணையர் — அன்று மின்னஞ்சல் மூலம் அனுப்பிய புகார் கடிதத்தை மும்பை தொழிலாளர் துணை ஆணையருக்கு நடவடிக்கை எடுக்க சொல்லி அனுப்பியுள்ளார்.
 • அறிவுசார் கூட்டமைப்பினர் தமிழ்நாடு தொழிளார் துறை துணை ஆணையரை சந்தித்து பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்ந்து புகார் மனு அளித்துள்ளனர். ஒரு வார காலத்தில் எல்&டி இன்ஃபோடெக் நிறுவன மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு நோட்டீஸ் அனுப்புவதாக துணை ஆணையர் உறுதி அளித்துள்ளார்.
 • மே மாதம் 30 ஆம் தேதி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் சோளிங்க நல்லூர் சந்திப்பில் பாதிக்கப்பட்டவர்களால் அறிவுசார் பணியாளர் கூட்டமைப்பினருடன் சேர்ந்து நடத்தப்பட்வுள்ளது என்றும் தெரிவித்தனர்.

 

Leave a Reply

You must be logged in to post a comment.