புதுக்கோட்டை:
உளுந்துப் பயிரில் மஞ்சள் தேமல் நோய்த் தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் துறை யோசனை தெரிவித்துள்ளது.இதுகுறித்து புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குநர் (பொ) ரெ.சதானந்தம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டத்தில் நீர்ப்பாசன வசதியுள்ள இடங்களில் விவசாயிகள் தற்போது உளுந்து சாகுபடி செய்துள்ளனர்.அவ்வாறு சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்துப் பயிரில் மஞ்சள் தேமல் நோய் தாக்குதல் பொதுவாக ஜூன், ஜூலை மாதங்களில் காணப்படும். இது நச்சுயிரியால் (வைரஸ்) உருவாகும்.இந்த நோய்த் தாக்குதலுக்கு ஆளான பயரின் தொடக்கத்தில் இலைகள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். பின் அவை இலை முழுவதும் பரவி ஒளிரும் மஞ்சள் நிறத்தில் ஆங்காங்கே பச்சைப் புள்ளிகளுடன் இருக்கும். வெள்ளை ஈ எனும் பூச்சியின் மூலம் பரவும் இந்நோயைக் கட்டுப்படுத்த நோய் கண்ட செடிகளை தொடக்கத்திலேயே பிடுங்கி அழிக்க வேண்டும்.
நோய் பரப்பும் வெள்ளை ஈ -யைக் கட்டுப்படுத்த மோனோகுரோட்டபாஸ் மருந்தை ஒரு ஹெக்டேருக்கு 500 மில்லியளவில் விதைத்த 45 நாட்களுக்குள் தெளிக்கவேண்டும்.அல்லது ஒரு ஹெக்டேருக்கு இமிடாகுளோபிரிடு 250 மில்லி எனும் அளவில் தெளித்து இந்நோயைக் கட்டுப்படுத்தலாம். எனவே உளுந்து சாகுபடி செய் துள்ள விவசாயிகள் மேற்கண்ட முறைகளைப் பயன்படுத்தி மஞ்சள் தேமல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.

Leave a Reply

You must be logged in to post a comment.