புதுக்கோட்டை செப்.3-
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புதுக் கோட்டை மாவட்ட அள விலான துளிர் மற்றும் ஜந் தர் மந்தர் வினாடி வினா போட்டி கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று புதுக்கோட் டையில் நடைபெற்றது.6 முதல் 12-ம் வகுப்பு வரை மாவட்டம் முழுவ தும் இருந்து துளிர் வினாடி வினா போட்டிக்கு 42 பள்ளி களிலிருந்து 126 மாணவர் களும், ஜந்தர் மந்தர் வினாடி வினா போட்டிக்கு 10 பள்ளி களிலிருந்து 30 மாணவர் களும் பங்கேற்றனர்.
6,7,8 பிரிவில் கீரனூர் புனித சகாய மாதா நடுநி லைப் பள்ளி முதலிடத்தை யும், புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடத்தை யும், 9,10 பிரிவில் மழையூர் அரசு மேல்நிலைப் பள்ளி முதலிடத்தையும், தெம்மா வூர் அரசு உயர்நிலைப் பள்ளி இரண்டாமிடத்தை யும், 11, 12 பிரிவல் கீரனூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடத்தையும், பெருங்க ளூர் அரசு மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடத் தையும் பெற்றன.ஜந்தர்மந்தர் வினாடி வினா போட்டியில் 6,7,8 பிரிவில் சமஸ்கிருத வித்யா லயா ஓரியண்டர் உயர் நிலைப் பள்ளி முதலிடத் தையும் மவுண்ட்சியோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடத்தை யும், 9, 10 பிரிவில் மவுண்ட் சியோன் பள்ளி முதலிடத் தையும், பிரகதம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி இரண் டாமிடத்தையும், 11, 12 பிரிவில் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி முதலி டத்தையும், மவுண்ட்சி யோன் மெட்ரிக்பள்ளி இரண்டாமிடத்தையும் பெற்றன.
பரிசளிப்பு விழா : பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு பேலஸ்சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் கே.மோகன் ராஜ் தலைமை வகித்தார். அறிவியல் இயக்க மாவட் டத் தலைவர் அ.மணவா ளன், ரோட்டரி சங்கத் தலைவர் இதயத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு களை வழங்கி உதவித் தொடக்கக்கல்வி அலவலர் ஆர்.மகேஸ்வரன் பரிசு களை வழங்கினார். துளிர் வினாடி வினா போட்டி ஒருங்கிணைப்பாளர் ராசி. பன்னீர்செல்வன் வரவேற் றார். அறிவியல் இயக்க மாநி லப் பொருளாளர் எல்.பிர பாகரன், செயலாளர் ஆர். நீலா, மாவட்டச் செயலா ளர் ம.வீரமுத்து, பொரு ளாளர் கா.ஜெயபாலன், இணைச் செயலாளர் எம். குமரேசன் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர். முடிவில் முத்துச்சாமி நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.