1960களில் தங்கவேலு, சந்திரபாபு, ஏ.கருணாநிதி போன்ற முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து நகைச்சுவை நடிப்பில் கொடிகட்டிப்பறந்த பிரபல நடிகை டி.பி. முத்துலட்சுமி.“அவங்களுக்கு குழந்தை இல்லை. அதனாலே என்னை தங்களோட மகனாக வளர்த்தாங்க, அவங்க என் அப்பாவின் அக்கா பொண்ணு. எனக்கு மதினி முறை, ஆனால் நான் அம்மான்னு தான் கூப்பிடுவேன், அவங்க இடுப்புல தான் எப்பவும் இருப்பேன். என்னை கீழே இறக்கியே விட மாட்டாங்க. என் வளர்ப்புத் தாயார் பிரபல நகைச்சுவை நடிகை, நான் குடியிருந்தது சாலிகிராமம், எங்க வீட்டைச் சுற்றி ஸ்டூடியோக்களாகவே இருந்தது. நாங்க விளையாட போன இடம் ஸ்டூடியோக்களாக இருந்தது. வீட்டைச் சுற்றியிருந்தவர்கள் சினிமா தொழிலாளர்கள். இப்படி சினிமா சூழலில் வளர்ந்ததாலோ என்னவோ எனக்குள் சினிமா ஆர்வம் வந்து விட்டது,” என்று தனது திரையுலக வருகையின் பின்னணியைக் கூறுகிறார் டி.பி. கஜேந்திரன்.
அவர் தொடர்ந்து பேசுகிறார்:“பி.ஏ. முடித்த பிறகு வேலை தேடும் முயற்சியில் இருந்த போது, அருணாசலம் ஸ்டூடியோ மேலாளர் ஏ.கே. வேலனிடம் சேர்ந்தேன்.அப்போதுஎப்பவுமே அவரோட சுற்றிக் கொண்டிருந்ததாலோ என்னவோ பெரிய பொறுப்பை எனக்கு கொடுத்தார்.‘உறங்காத கண்கள்’ என்றொரு படம் எடுத்தார். அதில் சினிமாவைப்பற்றி நிறைய கத்துக்கிட்டேன். அந்த துறையில் என்னைவளர்த்துக்கணும்னு கேமிராமேன், சவுண்ட் என்ஜினியர் இப்படி பல கலை நுட்ப வல்லுநர்களிடம் நட்பு கொண்டேன்.அப்போது ஸ்ரீகம்பட்டி ராஜ கோபால்னு ஒரு நண்பர். அவர் கலைப் படம் எடுப்பதாகவும், என்னை உதவியாளராகவும் சேர்த்துக் கொண்டார். ஆனந்த விகடனில் முத்திரைக் கதையாக வந்த ‘நிலம் பொல்லாதது’ ங்கற கதையை கலைப்படமாக எடுத்தார். படத்தின் ஹீரோ பூரணம் விஸ்வநாதன், கதாநாயகி ஊர்வசி அர்ச்சனாவின் அம்மா சுசிலா, அவங்க அழகு சிலை மாதிரி இருப்பாங்க. அவர்களை வைத்து, ஒரு வயோதிக காதலை முன்னிலைப் படுத்தி நாவல்டீயாக எடுத்தோம். தஞ்சாவூரில் 40 நாள் தங்கி முழுப்படம் எடுத்து வந்தோம். சில பல காரணங்களால் அந்தப் படம் வெளிவரவில்லை.அடுத்து மோகன் காந்திராமன் சாரோட ‘ஆனந்த பைரவி’ னு ஒரு கமர்ஷியல் ஒர்க் பண்ணினேன். கே.ஆர். விஜயா, ரவிச்சந்திரன் நடிச்சாங்க. ஊட்டியில் படப்பிடிப்பு நடந்தது. அந்தப் படத்துல ‘உதவி இயக்குநர் டி.பி. கஜேந்திரன்’ னு டைட்டில் கார்டு போட்டார்.எனக்கு கல்யாணம் நடந்த நாலாவது நாள் பாலசந்தரின் கலாகேந்திரா யூனிட்டில் சேர்ந்தேன். அந்த நிறுவனத்திற்காக நடிகை லட்சுமி ‘மழலைப் பட்டாளம்’ படத்தை இயக்கினார். நான் அவருக்குஉதவிஇயக்குநர்பாலசந்தர் சார் டைரக்ஷன் மேற்பார்வை. அப்போது தான் இயக்குநர் சிகரத்தின் அறிமுகம் கிடைத்தது. அவருடைய உதவியாளராக ‘தில்லு முல்லு’ ‘வறுமையின் நிறம் சிவப்பு’ ‘தண்ணீர் தண்ணீர்’ னு நாலு படங்களில் வேலை பார்த்தேன். அவருடன் பணியாற்றிய நாலு படங்களும் மறக்க முடியாதது.
எனக்கு சினிமாவை அறிய வைத்தப் படங்கள்.விசு சார் டைரக்டர் ஆனபோது அவரிடம் அசோஸியேட் டைரக்டராக சேர்ந்த பிறகுதான் என் லைப் ஸ்டைலே மாறிப் போச்சு. என் பொருளாதார நிலை உயர்ந்தது. அவருடன் 25 படங்களில் வேலை பார்த்தேன். என்னை நடிக்க வைத்தது அவரே. “வீடு மனைவி மக்கள்” படத்தின் முதல் இயக்குநரானேன்.
என்முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றது. அது 9 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. நான் ஒரு டைரக்டராக உயர்ந்து நின்றேன். அடுத்தடுத்து வரிசையாக 19 படங்கள் இயக்கினேன். இருபதாவது படமாக இப்போது ஒரு படம் செய்து கொண்டிருக்கிறேன்.’’சினிமா, சின்னத்திரை என நடிப்பதால் தன்னை அடையாளம் காட்டி வருகிறார் டி.பி. கஜேந்திரன், காமெடி, குணச்சித்திரம் என நடிப்பிலும் வெளுத்து கட்டுகிறார்.

Leave A Reply

%d bloggers like this: