பாண்டா ஏக்/பாங்காக், ஏப். 11-
இந்தோனேசியா கடல் பகுதியில் புதன்கிழமை காலை 8.7 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற் பட்டதால், ஊருக்குள் ராட்சத கடல் அலைகளை கொண்டுவரும் சுனாமி ஏற்படலாம் என்ற பீதி ஏற் பட்டது.சுனாமி என்ற ஆழிப்பேரலை களை ஜப்பானும், இந்தோனேசியா வும் அறிந்த நிகழ்வாக இருந்த நிலையில் 2008ம் ஆண்டு சுனாமி இந்தியாவையும் முதல் முறையாக தாக்கியது. இதனால் தமிழ்நாடு உள் பட பல மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் பல ஆயிரம் உயிர் களை சீறி வந்த கடல் அலைகள் பறித்துச்சென்றன. 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி துயரமான நிகழ் வுகளை கொண்டு வந்த சுனாமி 8 ஆண்டுகள் ஆன போதும், மக்க ளுக்கு பெரும் அச்சம் ஏற்படுத்தும் நிகழ்வாகவே உள்ளது. இந்த நிலையில் இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் புதன்கிழமை நில நடுக்கம் ஏற்பட்டது.
இதனை அமெரிக்கா மற்றும் இந்தோனேசிய கண்காணிப்பாளர்கள் கண்காணித் தனர். இந்த நிலநடுக்கத்தால் இந்திய கடல் பகுதியில் சுனாமி ஏற்படலாம் என உஷார்படுத்தப்பட்டது.நிலநடுக்க அதிர்வு, இந்தியாவின் தெற்கு, கிழக்குப் பகுதிகள், இலங் கை, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் உணரப்பட்டது.இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், அந்தமான்-நிகோபார் பகுதிகளில் உணரப்பட்டது. இந் தோனேசியாவின் நகரமான பாண்டா ஏக்கில் இருந்து 431 கி.மீ. தொலைவில் கடல் பகுதியில் 8.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற் பட்டது.பாண்டா ஏக் நகரம் 2004ம் ஆண்டு 9.1 ரிக்டர் நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகாமையில் காணப்பட்ட நகரம் ஆகும். 2004ம் ஆண்டு நிலநடுக்கத்தில் சுனாமி அலைகள் பனைமர உயரத்திற்கு எழும்பி ஊருக்குள் புகுந்து இந்திய கடல் பகுதியில் உள்ள நாடுகளில் 2 லட்சம் மக்களை பலிவாங்கியது. இதில் பாண்டா ஏக் நகரில் மட்டும் 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் உயிரி ழந்தனர்.தற்போதைய நிலநடுக்கத்தின் போது, தரைப்பகுதி கடுமையாக 5 நிமிடம் ஆடியது என பாண்டா ஏக் நகர மக்கள் தெரிவித்தனர்.
இதனால் தொலைபேசி இணைப்புகள் குறுகிய நேரம் பாதித்தன. இதனால் பீதி அடைந்த மக்கள் தங்கள் குடி யிருப்புகளில் இருந்து, பாதுகாப் பான இடங்களுக்கு ஓடினர்.யு.எஸ்.புவியியல் ஆய்வு மையம் புதன்கிழமை கூறுகையில், மாகாண தலைநகரமான பாண்டா ஏக் நகரில் இருந்து 495 கி.மீ. தொலைவில் கட லின் 33 கிலோ மீட்டர் ஆழத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது என தெரி வித்தது.
தென் இந்தியா
இந்தோனேசியா நிலநடுக்க அதிர்வு சென்னை, பெங்களூர், திரு வனந்தபுரம் மற்றும் தென் இந்தியா வின் இதர நகரங்களில் உணரப்பட் டது. இதனால் சென்னை மெரினா கடற்கரையில் மக்கள், எச்சரிக்கப் பட்டு வெளியேற்றப்பட்டனர்.நாட்டின் தகவல் தொழில்நுட்ப தலைநகரமான பெங்களூரில் நில அதிர்வு உணரப்பட்டது.சுமத்ரா நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அந்தமான் நிகோபார் தீவு மற்றும் தமிழ்நாடு, ஆந்திரா கட லோரப் பிராந்தியங்களில் சுனாமி எச்சரிக்கையை இந்தியா வெளி யிட்டது.புவி அறிவியல் துறை அமைச்சக செயலாளர் கைலேஷ் நாயக், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட தகவ லைத் தெரிவித்தார்.
நிலநடுக்க அதிர்வு நிகோபர், கோமத்ரா கட்சல் பகுதிகளில் ஏற்பட்ட போது அங்கு கடல் அலைகள் சீறி எழுந்தன.தமிழகத்தில் மாலை 4.33 மணி அளவில் சுனாமி முதல் அலை ஊருக்குள் பாயலாம் என எதிர் பார்க்கப்பட்டது. சென்னை மற்றும் அருகாமைப் பகுதிகளில் நில அதிர்வு பயங்கரமாக உணரப்பட் டது. கொல்கத்தா மற்றும் அரு காமை பகுதிகளான வடக்கு 24 பர் கானா மற்றும் வடக்கு வங்காளம் சிலிகுரியிலும் நில அதிர்வு ஏற் பட்டது. அங்கு மக்கள் அலுவலகங் களை விட்டு வெளியே ஓடி வந்தனர். கட்டிட ஜன்னல்கள், கதவுகள் உருண்டன. பார்க் வீதியில் சில கட் டிடங்களில் விரிசல் ஏற்பட்டது. மதி யம் 2.42 மணி முதல் கொல்கத்தா மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப் பட்டது. ரயில் நிலையங்களை விட்டு, பயணிகள் அப்புறப்படுத்தப் பட்டனர்.ஹவாஸ் பசிபிக் சுனாமி எச்சரிக் கை மையம் கூறுகையில் இந்தோ னேசியா, இந்தியா, இலங்கை, ஆஸ் திரேலியா, மியான்மர், தாய்லாந்து, மாலத்தீவு மற்றும் இந்தியக் கடல் தீவுகள், மலேசியா, பாகிஸ்தான், சோமாலியா, ஓமன், ஈரான், வங்க தேசம், கென்யா, தென் ஆப்பிரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சுனாமி ஏற்படுவதற்கான நிலை உள்ளது என எச்சரித்தது.அந்தமானில் சுனாமி எச்சரிக் கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்குள்ள ஆயுதப்படை உஷார் படுத்தப்பட்டது. நிலநடுக்க அதிர்வு சுனாமி பாதிப்பால் அந்தமான் நிகோபார் தீவுப்பகுதியில் உயிரி ழப்பு குறித்து ஏதும் தகவல் இல்லை என பேரிடர் நிர்வாக துறை தெரி வித்தது.
ஒடிசாவில் சிறிய அளவு நில அதிர்வு உணரப்பட்டது. தலைநகர் புவனேஷ்வர், கட்டாக், குர்தா, நயாகர், ஜகத்சிங்பூர், ஜெய்ப்பூர் பகு திகளின் தரைப்பகுதி ஆடியது. உயர மானக் கட்டிடங்களில் இருந்த மக் கள் பயத்தில் வெளியே ஓடிவந்தனர்.அசாமில் சிறிய அளவு நில அதிர்வு ஏற்பட்டது. இங்கு நில அதிர்வு மதியம் 2.16 மணிக்கு துவங்கி 20 வினாடி இடைவெளியில் தொடர்ந்து உணரப்பட்டது.ஷில்லாங் நில அதிர்வு மைய செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், வடக்கு சுமத்ராவுக்கு வடக்கே 2.3 டிகிரி உயரத்தில் மேற்கு கடற்கரைக்கு 93 டிகிரி கிழக்கே நில நடுக்கம் மையம் கொண்டிருந்தது என்றார்.சுமத்ரா நிலநடுக்கத்தால் ஆந்தி ரப்பிரதேச அரசு, மாநிலத்தின் 9 கடலோர மாவட்டங்களின் அதி காரிகளை உஷார்படுத்தியது. கட லோர மாவட்ட கலெக்டர்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை எடுக்குமாறு ஆந்திர முதல்வர் கிரண்குமார் அறிவுறுத்தி னார். ஆந்திர மாநில பேரிடர் நிர் வாக துறை 24 மணி நேர கட்டுப் பாட்டு மையத்தை துவக்கியது.
அணுமின் நிலையம்
சென்னை அணுமின்சக்தி நிலை யம் (மேப்ஸ்) கல்பாக்கத்தில் உள் ளது. கடலோரப்பகுதிகள் உஷார் படுத்தப்பட்ட நிலையிலும், இந்த அணுமின் நிலையம் எந்தவித இடர் பாடும் இல்லாமல் இயல்பாக இருந் தது. சுனாமி எச்சரிக்கை வந்ததும் நாங்கள் அணுஉலை செயல்பாட் டை நிறுத்திவிட்டோம் என அணு மின் உலை பணிகளுக்கான மேப்ஸ் நிலைய இயக்குநர் கே.ராமமூர்த்தி தெரிவித்தார். இருப்பினும் அணு மின் நிலையம் உஷார் நிலையில் இருந்தது.
மேம்சில் 220 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் 2 பிரிவுகள் உள்ளன. இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி நிலையம், (இகார்) மற்றும் பாரதிய நபிகியா வித்யுத் நிகாம் லிமிடெட் (பவானி) அரு காமையில் இந்த அணுமின் நிலை யம் உள்ளது. அணு வளாகம் சென் னையில் இருந்து 80 கி.மீ. தொலை வில் அமைந்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.