தூத்துக்குடி அனல் மின் நிலைய 4வது யூனிட்டில் பழுது: மின் உற்பத்தி கடும் பாதிப்பு மின்வெட்டு அதிகரிக்கும் போராட்டம் தீவிரமடையும் தூத்துக்குடி, பிப். 12 – தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 5 யூனிட்டுகள் மூலம் 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இதற்காக கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு நிலக் கரி கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து கன்வேர் பெல்ட் மூலம் அனல் மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும். கடந்த சில மாதங்களாக நிலக்கரி பற்றாக்குறை ஏற் பட்டதால், அனல்மின் நிலையத்தில் 1050 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப் படுவதற்கு பதிலாக, 720 மெகாவாட் அளவிற்கே மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமையன்று இரவு 4வது யூனிட்டில் திடீரென தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் 4வது யூனிட் டில் தினசரி நடைபெறும் 180 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட் டுள்ளது. இதனிடையே தூத்துக் குடி துறைமுகத்தில் கப்ப லில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்யும் கிரே னிலும் சனிக்கிழமையன்று திடீரென பழுது ஏற்பட் டது. இதனால் கப்பலில் இருந்து நிலக்கரியை இறக்க முடியவில்லை. ஏற்கனவே 4வது யூனிட் டில் மின் உற்பத்தி பாதிக் கப்பட்டுள்ள நிலையில், தற்போது கிரேனும் பழுது பட்டுள்ளதால், மின் உற் பத்தி கடுமையாக பாதிக்கப் படும் அபாய நிலை ஏற்பட் டுள்ளது. இது குறித்து அனல்மின் நிலைய அதிகாரி ஒருவர் கூறும்போது, தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 4வது யூனிட்டிலும், நிலக்க ரியை எடுத்துவரும் கிரேனி லும் பழுது ஏற்பட்டுள்ள தால் மின் உற்பத்தி பாதிக் கப்பட்டுள்ளது. அவசர அவசரமாக கிரேன் பழுது பார்க்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் 3நாட்களில் முடிவடையும். 4வது யூனிட்டை பழுது பார்க்க தில்லியில் இருந்து வல்லுநர்குழு வருகிறது. தற்போது தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட் டுள்ளதால் மின் வெட்டு அதிகரிக்கும் என தெரிகிறது. ஏற்கெனவே, வடசென் னை அனல் மின் நிலையத் தில் ஹைட்ரஜன் வாயு கசிவு ஏற்படுவதால் அங்கு மின் உற்பத்தி குறைந்துள் ளது. மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஸட்டர் இயந் திரக் கோளாறு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட் டுள்ளது. நெய்வேலி முதல்நிலை சுரங்கத்தில் நீராவி இயந்திர கோளாறு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட் டுள்ளது. நெய்வேலி இரண்டாம் நிலை சுரங்கத்தில் கொதிக லன் பிரச்சனையால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள் ளது. நிலக்கரி பற்றாக்குறை யாலும், தரமற்ற நிலக்கரியா லும் அனல் மின்நிலையங் கள் கடுமையான பாதிப் புக்குள்ளாகியுள்ளன. கிட் டத்தட்ட இயந்திரங்கள் பழுதாகிற அளவிற்கு நிலைமை சீர்கெட்டுள்ளது. இப்படி உருவாகியுள்ள நெருக்கடிகளால் ஏற்கெனவே இருந்த மின் வெட்டு மிகப்பெரிய அள வில் சிக்கலாகி இருக்கிறது. மத்திய, மாநில அரசு களின் தொடர்அலட்சியத் தாலும், நிர்வாகச் சீர்கேடு களாலும், மின்துறையை சீர்குலைக்கும் நாசகரக் கொள்கைகளாலும் இத்த கைய அவல நிலை நீடிக் கிறது. இதனால் தமிழகத்தில் மின்வெட்டு நிரந்தரமாகி யுள்ளது. தினசரி 8மணி நேரம் மின்வெட்டு இருந்து வருகிறது. இதனால் தொழில்வளமும், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை யும் மிகக்கடுமையான முறையில் பாதிக்கப்பட் டுள்ளது. தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும் தொழில்துறை அமைப்பினரும் போராட் டங்களில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரத்தில் தொழில் வளமிக்க கோயம்புத்தூரில் கடுமையான மின்வெட்டு காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் 30 ஆயிரத்திற்கும் மேற் பட்ட தொழிற்சாலைகளை மூடி தொழிலாளர்களும் தொழில் முனைவோரும் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், மின் வெட்டு மேலும் அதிகரிக் கும் என்ற அபாயம் ஏற்பட் டுள்ளது. இதனால் மக்கள் போராட்டமும் தொழில் துறையினர் போராட்டமும் மேலும் தீவிரமடைகிறது. 50 சதவீதம் உற்பத்தி இழப்பு 20 சதவீதம் வேஸ்ட் அதிகரிப்பு தடையில்லா மின்சாரம் முழுமையாக வழங்க வலி யுறுத்தி மதுரை கப்பலூர் தொழிற்பேட்டையில் வேலை நிறுத்தமும் தர்ணாப் போராட்டமும் வரும் 14ம் தேதி செவ்வாயன்று நடை பெறுகிறது. இது தொடர் பாக கப்பலூர் தொழிற் பேட்டை உற்பத்தியாளர் கள் சங்கத்தின் செயலாளர் சி.முத்துராமன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: கப்பலூர் தொழிற் பேட்டை தமிழகத்தின் இரண்டாவது பெரிய தொழிற்பேட்டை. இதில் 550 ஏக்கர் பரப்பளவில் 400க்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் இயங்கிவருகின்றன. கப்பலூர் தொழிற் பேட்டை உற்பத்தியாளர் சங்கத்தில் அருகாமையில் உள்ள ஆட்டோமொபைல் கூட்டுறவு தொழிற்பேட் டை முதல் மகளிர் தொழிற் பேட்டைகள் ஆகியவை இணைந்துள்ளன. சுமார் 12,000 தொழிலாளர்கள் வேலைசெய்துவருகின்றனர். நிலவி வரும் கடுமை யான மின்வெட்டால் 50 சதவீதத்திற்கு மேல் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. 20 சதவீதம் வேஸ்ட் அதிகரிப் பால் உற்பத்தி குறைந்து கடு மையான நஷ்டத்தால் தொழிற்சாலைகளை மூடும் நிலைமை மற்றும் தொழி லாளர்கள் வேலைஇழக்கும் அபாயம் உள்ளது. இத னைக் கண்டித்து முழுமை யாக தடை யில்லா மின்சா ரம் வழங்கிட வேண்டி கப் பலூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்துடன் கூடிய தர்ணா பிப்ரவரி 14ம் தேதி, கப்பலூர் தொழிற் பேட்டை மின் அலுவலகம் எதிரில் நடைபெறும்.

Leave a Reply

You must be logged in to post a comment.